விநாயகர் ஊர்வல பாதையில் தற்காலிக CCTV பொருத்தும் பணி தீவிரம்.ஊர்வல பாதை, சிலை கரைக்கும் இடங்கள் போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகளானது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற இருக்கிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின்* உத்தரவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஊர்வல பாதைகளில் முக்கியமான இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் இடங்கள், சிலைகள் கரைக்கும் இடங்கள் முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும்படி கொண்டுவரப்படுகிறது. முன்னதாக கண்டறியப்பட்ட இடங்களில் இன்று தற்காலிக CCTV கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்காலிகமாக கண்டறியப்பட்ட இடங்களில் 150 CCTV கேமராக்கள் நிறுவப்பட்டு,நிகழ்ச்சிகள் முழுமைக்குமான CCTV பதிவுகள் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக