குட் பேட் அக்லி படத்தில் எனது பாடல்… ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த இளையராஜா



அஜித் குமார் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இளையராஜா சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


அஜித் குமார் நடிப்பில் வெளியான “GOOD BAD UGLY ” என்ற படத்தில் தனது இசையை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தியதற்காக, ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டும் மற்றும் பொதுமனிப்பு கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இளையராஜாவின் மூன்று பாடல்கள், “இளமை இதோ இதோ”, “என் ஜோடி மஞ்ச குருவி”, “ஒத்த ரூபா” ஆகிய பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீசுக்கு சட்டபூர்வ உரிமையாளர்களிடமிருந்து அனுமதி பெற்றதாக கூறிய தயாரிப்பு நிறுவனம் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்பொழுது மனு தாக்கல் செய்துள்ளார்...

Post a Comment

புதியது பழையவை