கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் புதிய கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது




கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் 6வது கண்ணாடியின் முதல் அடுக்கில்
மெல்லிய கீறல் சரிசெய்யப்பட்டு, புதிய கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது

கண்ணாடி பாலத்தில் மெல்லிய கீறல் ஏற்பட்டு 6 வது கண்ணாடி சேதமானது. இச்சேதமடைந்த கண்ணாடி நேற்று (08.09.2025) இரவு அகற்றபட்டது. அகற்றப்பட்ட இடத்தில் புதிய கண்ணாடி தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டு, பொருத்தப்பட்டது. இப்புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி மேல் சுற்றுலா பயணிகள் நாளை (10.09.2025) முதல் நடந்து செல்லலாம் என தெரிவிக்கப்படுகிறது.


கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் அமைத்த பிறகு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து, கண்ணாடி பாலத்தின் மீது நடந்து சென்றுள்ளனர். கண்ணாடி பாலம் மிகவும் உறுதித்தன்மையுடனும் இருக்கின்றது. 

எனவே சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தினை தொடர்ந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

புதியது பழையவை