குமரி மாவட்டம், மாதவலாயம் பகுதியை சேர்ந்தவர் அம்ஜித்கான் .இவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிவிட்டார். திருட்டு குறித்து அம்ஜித்கான் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீஸ் விசாரனையில் மோட்டார் சைக்கிளை திருடியது அதே பகுதியை சேர்ந்த சமீர் என்ற முகமது சமீர் மீரான்(26) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஏற்கனவே இரண்டு மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து சமீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.