குமரி திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி

0

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதி 19 திருநங்கைகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார் .
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குமரி மாவட்ட 19 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தமிழக முதலமைச்சரின் கொரோனா சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது .இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு 19 திருநங்கைகளுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ. 38000 ரொக்கமாக பணமாக வழங்கினார்.நிகழ்ச்சியில் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ-எம்.ஆர்.காந்தி ,விஜயகுமார் எம்.பி ,சமுக நலத்துறை அதிகாரி சரோஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)