குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை மேம்பாடு செய்வது குறித்த ஆய்வு கூட்டம் கடந்த இரண்டு நாட்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது .
கூட்டத்தில் பேச்சிப்பாறை ,சிற்றார் அணையில் படகு தளம் மற்றும் ரிசாட்கள் அமைக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பேச்சிப்பாறை மற்றும் சிறாறார் அணை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார் .ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீத்தாராமன் ஆகியோர் உடனிருந்தார்.