திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் என்ஜீனியர் திடீர் மாயம்

0


சென்னை பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 22). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் என்ஜினீ யரிங் படித்துள்ளார்.

இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக குமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியில் உள்ள வாலிபர் ஒருவருடன் ஸ்ரீஜாவுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

இவர்களின் திருமண நிச்சயத்தார்த்தம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக ஸ்ரீஜாவும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் குமரி மாவட்டம் வந்தனர்.

தக்கலை அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி  இருந்தனர். நேற்று ஸ்ரீஜா உறவினர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. 

இதனால்  பதறி போன  பெற்றோர் ஸ்ரீஜாவை பல இடங்களிலும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஸ்ரீஜாவின் தந்தை வேலாயுதன், தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஸ்ரீஜாவை தேடி வருகிறார்கள்.

திருமணம் நிச்சயமான நிலையில் பெண் என்ஜினீயர் மாயமாகி இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

Post a Comment

0Comments
Post a Comment (0)