குடிபோதையில் ரோட்டில் சென்ற பெண்ணை முத்தமிட்ட வாலிபர் - கன்னியாகுமரியில் பரபரப்பு

0

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழகம் உள்ளது. ரப்பர் தோட்டங்கள் மற்றும் எஸ்டேட்கள் நிறைந்த பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்காக லோயர் காலனி உள்ளது.

அந்தப் பகுதியில் அடிக்கடி இளைஞர்கள் ஒன்றாக கூடி மது அருந்தி தகராறு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பலமுறை பகுதியினர் வாலிபர்களை எச்சரித்து உள்ளனர் இருப்பினும் அந்த பகுதி முழுவதும் மது அருந்துபவர்களின் கூடாரமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதி வழியாக 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அதே சமயத்தில் அந்த பகுதியில் ஜெராேல்டு என்ற வாலிபர் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இறந்துள்ளார்.
நண்பர்களுக்குள் போட்டி ஏற்பட்டு உள்ளது. அவர்கள் கடந்து சென்ற பெண்மணியில் முத்தமிட வேண்டும் என போட்டி வைக்கப்பட்டது.


ஏற்கனவே மது போதை தலைக்கு ஏறிய நிலையில் இருந்த ஜெராேல்டு வலுகட்டாயமாக நடுரோட்டில் சென்ற பெண்மணியை இழுத்து முத்தமிட்டு மாணபங்கப்படுத்தியுள்ளார். அதனால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி கீரிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்

அந்த புகாரின் அடிப்படையில் காவல் ட்ரெயினர் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது வாலிபர் தலைமறைவாகி உள்ளார். அவரை காவல் துறையினர் தீவிரமான வலைவீசி தேடி வருகின்றனர்.


நாட்டில் எத்தனையோ குற்றங்கள் மது போதை காரணமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)