செல்வராகவனின் உதவியாளர் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படம்

0


நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது. இந்தப் படத்தை இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் இயக்குகிறார்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அண்மையில் வெளியான நடிகர் ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்' படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இயக்குகிறார்

நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது. அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. முன்னதாக, இதே தயாரிப்பு நிறுவனம் சார்பில் மற்றொரு படத்திலும் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)