ஆவின் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு குட் நியூஸ்



ஆவின் மேலாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

 கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் விற்பனை மேற்கொள்ளப்படும் ஆவின் பால் பொருட்கள் குமரி மாவட்டம் முழுவதும் தங்குதடையின்றி கிடைக்க ஏதுவாக குமரி மாவட்டம் முழுவதும் ஆவின் பால் பொருட்களான நெய், தயிர், மோர், பால் பேடா, பாதாம் பவுடர், சாக் லேட், குக்கீஸ், பன்னீர் நறுமண பால் விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விபரங்கள் அறிய குமரி மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

புதியது பழையவை